Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: முனைவர்.வெ.மு.ஷாஜகான் கனி
முகவை மாவட்டம் அபிராமம் என்ற ஊரில் 1948இல் பிறந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேதியியலில் பி.ஏஸ்சி. பட்டம் பெற்றார். பிறகு, தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டமும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இதழியலில் முதுகலை முடித்துத் தமிழ் மேடை நாடகங்களை ஆராய்ந்து முனைவர் பட்டமும் பெற்றார். மதுரை யாதவர் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தில் இவர், இணைப்பேராசிரியராகப் பணியாற்றி 2005இல் பணி நிறைவு பெற்றார். நாடகம் இவரது விருப்பமான துறை. முறைசாராக் கல்வித்துறைக்கு வீதிநாடகங்கள் பல ஏழுதிய சிறப்பிற்காக 1996இல் டாக்டர் மால்கம் எஸ்.ஆதிசேஷையா விருது பெற்றார். தமிழ் நாடகங்களில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். ‘அரங்கேற்றுகாதை ஆராய்ச்சி’ என்ற இவர் நூல், இவரது நாடகப் புலமையைக் காட்டும். அண்மையில் ‘தமிழ்நாடகக்(குறுங்) கலைக்களஞ்சியம்’ என்று வெளிவந்துள்ள இவரது நூல், பழந்தமிழ் நாடகம் குறித்த பல புதிய வெளிச்சத்தைத் தந்துள்ளது.1978 முதல், கற்புகள் கற்பனைகள், புகை ஆகிய திரை நாடகங்களில் தொடங்கி, இதுவரை 16 நூல்களை இவர் எழுதியுள்ளார். அவற்றுள் ‘சிறகுகள் தரும் சின்னத்திரைக் கலை’ என்ற சின்னத்திரை மற்றும் திரைப்படம் பற்றிய கலை நுட்பங்கள் கூறும் அந்நூலுக்கு இயக்குநர் பாலுமகேந்திரா பாராட்டி அணிந்துரை வழங்கியுள்ளார்.மதுரை யாதவர் கல்லூரியில் 1986 முதலாக வீடியோ பயிற்சி வகுப்பு இவரது பயிற்றுவித்தலில் தொடங்கி 2005 வரை நடந்தது. மதுரை பாலிடெக்னிக் கல்லூரியிலும் வீடியோ பயிற்சி வகுப்பினை இவர் நடத்தியுள்ளார். அவற்றின்வழி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக் கலைஞர்களை உருவாக்கியுள்ளார். அப்போது குறும்படங்களை இவரே இயக்கிய அனுபவமும் இவர்க்கு ஊண்டு. இவரிடம் மாணவ ராக இருந்து திரைத்துறையில் இன்று புகழ்பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சுசி.கணேசன், ஒளிப்பதிவாளர் செழியன், சசி குமார் முதலியோர். கல்லூரி, ஜெயங்கொண்டான் ஆகிய திரைப்படங்களிலும் இவர் சிறிய வேடமேற்று நடித்துள்ளார்.

Author's Other Books

   திரைப்படக் கலை...
திரைப்படக் கலை
Rate : Rs 210.00
Same Catergory
   திரைக்கதை எழுது...
திரைக்கதை எழுதுவது எப்படி?
Rate : Rs 80.00
   எம் தமிழர் செய்த...
எம் தமிழர் செய்த படம்
Rate : Rs 100.00
   திரைக்கதை பயிற்...
திரைக்கதை பயிற்சி புத்தகம்
Rate : Rs 130.00
   பதேர் பாஞ்சாலி ந...
பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள்
Rate : Rs 90.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy