1930இல் சென்னையில் பிறந்து கும்பகோணத்தில் வளர்ந் தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயின்ற பிறகு டில்லி யுனிவர்சிட்டியில் தமிழிலக்கியத்தில் வைஷ்ணவம் - ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்ற பொருளில் முனைவர் பட்டம் பெற்றார். டில்லி, வார்ஸா (போலந்து), பாண்டிச் சேரி ஆகிய இடங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் பணியாற்றியிருக்கிறார்.
17 நாவல்களும், 4 குறுநாவல் தொகுதிகளும், 6 சிறு கதைத் தொகுப்புகளும், 15 நாடகங்களும் எழுதியிருக்கிறார். அவருடைய பல நாடகங்களும், நாவல்களும் ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவருடைய உச்சி வெயில் என்ற நாவல் படமாக்கப்பட்டு ஸ்வர்ண கமல் விருதை 1990இல் பெற்றது.
சாகித்ய அகாதமி விருது (1977) பாரதிய பாஷா பரிஷத் விருது (1996) தமிழக அரசு விருதுகள் (1979&1980) கஸ்தூரி ஸ்ரீனிவாசன் விருது (1987) தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்க வாழ் நாள் சாதனை விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்திரா பார்த்தசாரதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். தற்சமயம் சென்னையில் வசிக்கிறார்.