
ரவிக்குமார் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மாங்கணாம்பட்டு என்ற சிற்றூரில் பிறந்தவர். விமர்சனம், மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம் என தீவிரமாக செயல்பட்டு வருகிறார். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். நிறப்பிரிகை, தலித், போதி ஆகிய இதழ்களின் ஆசிரியர். இவரது கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள சாம்யா பதிப்பகத்தாரால் Venomous touch என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும், சட்ட மன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவரது முக்கியமான நூல்கள்: கண்காணிப்பின் அரசியல், கொதிப்பு உயர்ந்து வரும், கடக்க முடியாத நிழல், உரையாடல் தொடர்கிறது-மொழிபெயர்ப்பு, பணிய மறுக்கும் பண்பாடு (மொழிபெயர்ப்பு), கட்டிலில் கிடக்கும் மரணம் (மொழிபெயர்ப்பு கதைகள்), வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான் (மொழிபெயர்ப்புகதைகள்), தமிழராய் உணரும் தருணம், சோளிக் கே பீச்சே (மொழிபெயர்ப்பு கதைகள்), துயரத்தின் மேல் படியும் துயரம், வன்முறை ஜனநாயகம், மால்கம் எக்ஸ், சொன்னால் முடியும், இன்றும் நமதே, கற்றனைத்தூறும், சூலகம், பிறவழிப் பயணம், அவிழும் சொற்கள் (கவிதைகள்)