Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: விமலாதித்த மாமல்லன்
இயற்பெயர் சி. நரசிம்மன். சென்னை திருவல்லிக்கேணியில் 19.06.60ல் பிறந்தார். பள்ளிப்பருவம் பாண்டிச்சேரியில். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர், எனினும் பட்டதாரி அல்லர். கல்லூரி இறுதி ஆண்டுகளில் நவீன நாடகங்களில் நடிக்கவும் சிறுகதைகள் எழுதவும் தொடங்கினார். 1981ல் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் ‘வலி’ கதை மூலம் அறிமுகமாகி அதே ஆண்டு கணையாழியில் வெளியான Ôஇலை’ மற்றும் Ôபெரியவர்கள்’ குறுநாவல் வழியே இலக்கிய சூழலின் பரவலான கவனத் திற்கு வந்தார். 1982-83ல் பரந்த அனுபவம் தேடி காவியுடுத்து தேசாந்திரம் புறப்பட்டவர், இரண்டு முறையும் பாதியிலேயே திரும்ப நேர்ந்தது. 1983 டிசம்பரில் முதலாவது தொகுப்பு Ôஅறியாத முகங்கள்’ வெளியானது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சமூக சேவகரான பாபா ஆம்தே தலைமையில், ரிழிமிஜி-மிழிஞிமிகி விளிக்ஷிணிவிணிழிஜில் பங்கேற்றார். 1985 டிசம்பர் முதல் 1986 ஏப்ரல் வரை கன்யாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு ஏறக்குறைய 5100 கிமீ சைக்கிளில் பயணம் செய்து, தேசிய ஒருமைப்பாட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 1986இல் Ôமுடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள்’ என்கிற இரண்டாம் தொகுதி வெளியானது. கல்லூரிப் பருவத்திலிருந்தே திரைப்படச் சங்கங்கள் வழி சினிமா மீது மோகம் இருந்தது. 1987ல் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் தற்செயலாய் நடிக்கப் போய், நேரடி அனுபவம் பெறுவதற்கான வாய்ப்பெனக் கருதி, வசனம், திரைக்கதை, உதவி மற்றும் இணை இயக்குநராய் சில வணிக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் பங்கேற்றார். 1994இல் Ôஉயிர்த்தெழுதல்’ என்கிற மூன்றாம் தொகுதி வெளியாயிற்று. சென்னையில் மத்திய கலால் துறையில் பணிபுரிகிறார்.

Author's Other Books

   விமலாதித்த மாமல...
விமலாதித்த மாமல்லன் கதைகள்
Catergory :  சிறுகதை
Rate : Rs 180.00
Same Catergory
   தேர்ந்தெடுத்த ச...
தேர்ந்தெடுத்த சிறுகதைகள்-3
Rate : Rs 240.00
   சேகுவேரா வந்திர...
சேகுவேரா வந்திருந்தா
Rate : Rs 180.00
   ஸ்ரீரங்கத்து கத...
ஸ்ரீரங்கத்து கதைகள்
Rate : Rs 200.00
   விஞ்ஞானச் சிறுக...
விஞ்ஞானச் சிறுகதைகள்
Rate : Rs 340.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy